தந்தை பெரியார் முதல் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி வரை எல்லா தலைவர்களும் காயித்தே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள் எண்ணற்ற இஸ்லாமிய கல்லூரிகள் உருவாக வித்திட்டவர் காயிதே மில்லத் இவரின் இயற்பெயர் முகமது இஸ்மாயில் ஆகும் ஆனால் இவரின் தன்னலமற்ற தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால் காயிதே மில்லத் (வழிகாட்டும் தலைவர்) என்றே அழைக்கப்பட்டார்.
திருப்பூர் மங்கலம் நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் காயித்தே மில்லத் அவர்களின் பிறந்தநாளையொட்டி கொடியேற்றும் விழா நடைபெற்றது இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்றப்பட்டது தொடர்ந்து மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹா நசீர் ஏற்பாட்டில் வடுகன் காளியம்மன் பகுதியில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ,மங்கலம் நகர தலைவர் சாதிக்அலி நகர செயலாளர் முகமது ரபி, மங்கலம் ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் ரபிதீன், பல்லடம் தொகுதி பொறுப்பாளர் இர்ஷாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment