பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தாராபுரம் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் சார்பில் இலவச புத்தகம் விநியோகம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் கடை சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடைக்கு வரும் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தனர் அதை தொடர்ந்து பக்ரீத் பண்டிகை நாளான நேற்று கடைக்கு ஏராளமானோர் வந்து ஸ்வீட்ஸ் வகைகளை வாங்கிச் சென்றனர் பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக பூசணி அல்வா, ரெட் அல்வா, ஆங்கூர் பூந்தி, கலர் பூந்தி, ஆகியவை விற்பனை செய்யப்பட்டன அதனை முஸ்லிம்கள் குடும்பத்துடன் வந்து வாங்கி சென்றனர் அப்போது அவர்களுக்கு கடையின் உரிமையாளர் நா.முத்துக்குமார் மட்டும் நா.சங்கர் ஆகியோர் மன நிம்மதியை தேடி தரும் அன்றாட துஆக்கள் என்னும் புத்தகத்தை வழங்கினார்கள் அதனை மனம் மகிழ்வுடன் முஸ்லிம்கள் பெற்று சென்றனர் இதுகுறித்து அவர்கள் கூறும் போது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகத்தை வழங்கி உள்ளனர் இது போன்று அவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு நடை பயணம் செல்வோர்க்கு குடிநீர்,தின்பண்டம், விதை பந்து, ஆகியவற்ற இலவசமாக வழங்கினார்கள் மேலும் விநாயகர் சதுர்த்தியின் போது விதை விநாயகர், குடியரசு தினத்தின் போது விதை பந்துக்கள் வழங்கி மரம் வளர்ப்புக்கு உதவினார்கள் என்றனர்.
தமிழககுரல் இணையதள செய்திக்களுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாபர்சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment