சென்னையில் நடைபெறும் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு 66 வீராங்கனைகளை வழி அனுப்பி வைத்த திருப்பூர் கலெக்டர் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜூலை 1-ம்தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 5 பிரிவுகளில் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற உள்ளது முதல் கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிலம்பம், கபடி, கைப்பந்து விளையாட்டு போட்டிகளை நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் இந்த போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 8 பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் பங்கேற்க உள்ளனர் அவர்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி கலைக்கல்லூரியில் இருந்து புறப்பட்ட வீரர் வீராங்கனைகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப போட்டிகளில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகளிடம் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி வீரர் வீராங்கனைகள் புறப்பட்ட பஸ்சை கொடியை அசைத்து வழி அனுப்பி வைத்தார் இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ராஜகோபால் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செயலாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment