தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியீடு...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எஸ்.வி.ஆர் திரையரங்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தலைவர் என்.எஸ்.கே.சிவகுமார் தலைமையில்,மாவட்ட துணை பொருளாளர் ஈஸ்வரன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் திரையரங்கு முன் பட்டாசு வெடித்து அங்குள்ள குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்..இதில் மாநகரத் தலைவர் விஜயகுமார்,மாநகரச் செயலாளர் தம்பி குருபரணி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் முருகேசன்,பேரூராட்சி துணைப் பொருளாளர் சுப்பிரமணி, ஒன்றிய தலைவர் அசோக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் சென்னியப்பன்,நல்லாம்பாளையம் ஊராட்சி பொறுப்பாளர் உதயகுமார், நகர துணைத் தலைவர் நூரூல்ஹசன்,நகரப் பொருளாளர் சாகுல் ஹமீது, குண்டடம் பிரகாஷ் தினேஷ் குமார் மற்றும் 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment