திருப்பூரில் வாகன திருடனுக்கு 24 நாட்களில் தண்டனை பெற்றுக்கொடுத்த தெற்கு போலீஸாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் மாநகர போலீஸ் கமிஷனர் !
திருப்பூரில் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் குரு சரவணன் (வயது 29) இவரது ஸ்கூட்டரை மர்ம ஆசாமி திருட்டு சென்று விட்டார் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி புகார் அளித்தார்.
அதன் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தீவிர விசாரணை செய்து கடந்த இரண்டாம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த முகமது அலாம் ஆசாத்தை (வயது 22) கைது செய்து ஸ்கூட்டரை மீட்டனர் பின்னர் ஜேஎம் 2 கோர்ட்டில் வழக்கின் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து முறையாக சாட்சி விசாரணை முடித்து வாகன திருடன் முகமது அலாம் ஆசாத்துக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு பழனி குமார் தீர்ப்பளித்தார். வாகனம் திருட்டுப் போய் 24 நாட்களில் கோர்ட்டு விசாரனையை முடித்து தண்டனை பெற்றுக் கொடுத்து சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தி, கோர்ட்டு பணி முதல் நிலை காவலர் நாகராஜ் குட்டி, முதல் நிலை காவலர் அனித்ராஜ், ஏட்டு சந்தோஷ் குமார் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். திருப்பூர் தெற்கு காவல் நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment