திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டல அலுவலகம் முற்றுகை சி பி ஐ (எம்) அறிவிப்பு! திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையத்தில் அனைத்து வீதிகளிலும் தனியார் குடிநீர் குழாய் பதிக்கவும், பாதாள சாக்கடை தொட்டி பதிக்கவும், வீட்டு குடிநீர் குழாய் இணைப்புக்கு தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் குழிகளை பெரும் கற்களை கொண்டு மூடியதால் இருசக்கர வாகனங்கள் ஓட்ட மற்றும் பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதை மாநகராட்சி ஒன்னாவது மண்டல அதிகாரிகள் சிறிதும் கண்டு கொள்வது இல்லை,மேலும் வீதிகளில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது, சுகாதார துறையினர் சாக்கடை கழிவுகள் ரோடுகளில் சுகாதாரக் கேட்டை உருவாக்கும் நிலையில் அள்ளி போட்டுள்ளனர். இந்த அவல நிலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பர்பாளையம் கிளைகள் சார்பாக 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஐ(எம்) அனுப்பர் பாளையம் கிளைகள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment