தாராபுரம் நகராட்சி பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிக்கு பூமி பூஜை
தாராபுரம் நகராட்சி பகுதியில் தார் சாலை மற்றும் உரக்கடங்கு உள்ளிட்ட ரூ.46 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார். விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாபபு கண்ணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் முன்னிலை வகித்தார். அப்போது திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்து கூறியதாவது:-தாராபுரம் நகராட்சி பகுதியில் சுமார் 40ஆண்டு காலமாக முடிக்கப்படாத குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக., அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பணியில் முழு முயற்சியில் இப்பணிகளை நிறைவேற்றியதுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment