தாராபுரத்தில் பொதுமக்கள் செல்லும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவரை மீது நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் நீண்ட ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் ஏசு வீதியில் கருப்பண்ணசாமி கன்னிமார் கோயில் பொதுப் பாதை மெயின் ரோட்டிற்கு போகும் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு மற்றும் ஹாலோ பிளாக் கல்லால் காம்பவுண்டு சுவர் எழுப்பி அந்த வலியை ஆக்கிரமிப்பு செய்த முத்துவேல் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து அப்பகுதியை பொதுமக்கள் பொது வழியாக அமைத்து தர வேண்டிய அந்தப் பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி அப்பகுதி மக்கள் தாராபுரம் வட்டாட்சியரிடம் விடுதலை சிறுத்தை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர்கள் மனு வழங்கி கோரிக்கை விடுத்தனர்...
No comments:
Post a Comment