தாராபுரத்தில்,வரும் ஜூலை 5ஆம் தேதி உழவர் தியாகிகள் தினமாக அனுசரிப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

தாராபுரத்தில்,வரும் ஜூலை 5ஆம் தேதி உழவர் தியாகிகள் தினமாக அனுசரிப்பு.

 


தாராபுரத்தில்,வரும் ஜூலை 5ஆம் தேதி உழவர் தியாகிகள் தினமாக அனுசரிப்பு.


தாராபுரம், ஜுலை 02-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


விவசாயிகளின் கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த உத்தம தியாகிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ஆம் தேதி உழவர் தியாகிகள் தினமாக கொண்டாடி வருகிறோம் அந்த அடிப்படையில் இந்த ஆண்டு தாராபுரத்தில் அந்த தியாகிகள் மாநாடு நடைபெற உள்ளது வருகிற ஐந்தாம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு தீர்மானம் ஏற்ற இருக்கிறோம்.. வருகின்ற ஐந்தாம் தேதி உடுமலை சாலை சந்திராபுரம் பிரிவில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தியாகிகள் தின மாநாடு நடைபெறுகிறது..இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ்.. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஈரோடு மாவட்ட தலைவர் மகுடீஸ்வரன் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி முன்னாள் கவுன்சிலர் பாலு தாராபுரம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி  துணை தலைவர் சின்னசாமி கவுண்டர் இளைஞர் அணி தலைவர் கதிரேசன் மற்றும் 50க்கும் மேற்பட்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad