திருப்பூரில் பயங்கர தீ விபத்தால் பனியன் கம்பனி பற்றி எரிந்தது....
திருப்பூர் காங்கேயம் ரோடு புதுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பனியன் கம்பெனி திடீரென தீப்பிடித்து எரிந்தது தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர் இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை அதிகாரிகள் தாசில்தார் தீயணைப்பு வாகனங்கள் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு வேகமாக தீ பரவாமல் கட்டுப்படுத்த முயற்சி எடுத்த நிலையில் கட்டுக்கடங்காத தீயில் பனியன் கம்பெனி முழுவதும் எரிந்து சாம்பலானது பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பனியன் ஆடைகள், இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது பனியன் கம்பெனியின் உரிமையாளர் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது அவர்களுக்கு மேயர் தினேஷ்குமார் ஆறுதல் கூறினார் திருப்பூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதர் பேட்டை அருகில் இருந்த பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலான நிலையில் அந்த சோகம் மறைவதற்குள் காங்கேயம் ரோட்டில் பனியன் கம்பெனி எரிந்து நாசமானது மேலும் வியாபாரிகளை சோகத்தில் ஆழ்த்தியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் காஜா மொய்தீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment