நொய்யல் கரை அம்மன் ரதம் வெள்ளியங்கிரி மலையிலிருந்து கோவை, அவிநாசி வழியாக திருப்பூர் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2023

நொய்யல் கரை அம்மன் ரதம் வெள்ளியங்கிரி மலையிலிருந்து கோவை, அவிநாசி வழியாக திருப்பூர்


திருப்பூர் விவசாய மற்றும் அனைத்திந்திய தொழிலாளர்கள் சங்கத்திற்கு  நொய்யல் கரை அம்மன் ரதம் வருகை,  நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கிலும், ஜீவ நதிகளை இணைக்கும் நோக்கிலும் கோவை ஈஷாவில் இருந்து பேரூர் ஆதீனம்,சிரவை ஆதினம்,குரு மகா சன்னிதானங்களின் நல்லாசியுடன் பல்வேறு மடங்களில் இருந்து வந்த துறவிகளுடன் நொய்யல் கரை அம்மன் ரதம் வெள்ளியங்கிரி மலையிலிருந்து கோவை, அவிநாசி வழியாக திருப்பூர் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகத்திற்கு வந்தடைந்தது  அப்போது சங்க நிறுவனத் தலைவர் ஜி. கே. விவசாயமணி (எ) ஜி.சுப்பிரமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் தொழிலாளர்கள் பொதுமக்கள்  குழந்தைகளுடன் திரளாக கலந்து கொண்டு நொய்யல் கரை அம்மன் ரதத்தினை மலர்தூவி வரவேற்றனர் மேலும் நொய்யல் கரை அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபட்டனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட துறவிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் பொறுப்பாளர் பாரதி அவர்கள்  பேசும் போது நொய்யல் கரை அம்மன் ரதம், மற்றும் ஈஷா யோகா மையத்தின் விழிப்புணர்வு வாகனம் மூலம் வெள்ளியங்கிரி மலையிலிருந்து கோவை, திருப்பூர் வரும் வழிகளில் பள்ளி மாணவ ,மாணவிகளிடமும், பொது மக்களிடையேயும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்  நீர்நிலைகளில் சாக்கடைகளில் குப்பைகள் போட வேண்டாம் என்றும் திருப்பூர் பகுதிகளில் நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீர் கலக்காமல் இருக்க அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் ஜிகே விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதலில் இயங்கும் விவசாய மற்றும் அனைத்திந்திய தொழிலாளர்கள் சங்கத்தினர் பிளாஸ்டிக் ஒழிப்பிலும், நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் இந்த நிகழ்ச்சியில் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார் 

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad