திருப்பூர் மாநகராட்சி 52-55 வது வார்டுகளில் தார் சாலை சீரமை த்தல் பணி துவக்க விழா! திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலம் 52 வது 55 ஆவது வார்டில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ 122.81 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளியங்காடு 60 அடி மெயின் ரோடு, ஈஸ்வரமூர்த்தி நகர், மூன்றாவது வீதி, நான்காவது வீதி, ஐந்தாவது வீதி, மற்றும் குறுக்கு வீதி தெற்கு தோட்டம் 1,2,3 ஆகிய வீதிகளுக்கு தார் சாலை சீரமைத்தல் பணி துவக்க விழா நடைபெற்றது, இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம் எல் ஏ மற்றும் திருப்பூர் மாநகர மேயர் என். தினேஷ் குமார், தெற்கு மாநகர திமுக செயலாளரும், தொமுச மாநில துணைச் செயலாளருமான டி கே டி மு. நாகராசன், மாவட்ட துணை செயலாளர் நந்தினி, வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி கழக செயலாளர்கள் மியாமி ஐயப்பன், உசேன், வட்ட திமுக செயலாளர்கள் நந்தகோபால், ஆதவன், முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள், கணேஷ், ஆனந்தி சுப்பிரமணியம், பகுதி அவை தலைவர் தம்பி குமாரசாமி, இளைஞரணி கவின், மற்றும் 52 -55 வது வட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment