ராட்சத மரம் விழுந்ததில் மூன்று வணிகக் கடைகள் சேதம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 July 2023

ராட்சத மரம் விழுந்ததில் மூன்று வணிகக் கடைகள் சேதம்

 


தாராபுரம் அண்ணா சிலை அருகே காற்றின் வேகம் தாங்காமல் ராட்சத மரம் விழுந்ததில் மூன்று வணிகக் கடைகள் சேதம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முக்கிய பகுதியான அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி வளாகம் அருகே நிறைய மரங்கள் உள்ளது இந்த மரங்கள் ஆனது கடின தன்மையற்ற புங்கை மரம் வகையைச் சேர்ந்தது. பொதுவாகவே தாராபுரத்தில் ஆடி மாதம் காற்று அதிகம் உள்ள  நிலையில் இன்று பலத்த காற்றுக்கு பெரிய ராட்சத புங்கை மரம் காற்றின் வேகம் தாங்காமல் பெரிய கிளை முறிந்து விழுந்து அங்கு செயல்பட்டு வந்த டீக்கடை மற்றும் பழக்கடை வீட்டு பிராணிகள் வளர்ப்பு கடை மீது விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டது.  மதிய நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில் யாருக்கும் எந்த அசம்பாவிதம் ஏற்படவில்லை

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு முறிந்து விழுந்த மரத்தை ராட்சத கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் அவர்களுக்கும் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad