தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி சூழலும் சொல்லரங்கம் நடைபெற்றது! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 July 2023

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி சூழலும் சொல்லரங்கம் நடைபெற்றது!

 


தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி சூழலும் சொல்லரங்கம் நடைபெற்றது! திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகர கழகம் சார்பாக, முத்தமிழறிஞர் 

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு  சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் MLA அவர்களின் தலைமையில் மாபெரும் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் , தமிழ்நாடு அரசு கொறடா கோவி.செழியன் MLA , கரூர் முரளி, தூத்துக்குடி சரத்பாலா, நெல்லிக்குப்பம் புகழேந்தி, சைதை சாதிக் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன் , வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் , பகுதி கழகச் செயலாளர்களும், வட்ட கழக செயலாளர்களும்,மாவட்ட, மாநகர ,பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad