தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 July 2023

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்


தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக தினமும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது..


தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களின் ஆணைப்படி தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் சார்பில் திருப்பூர் மாவட்டம் தொழிலாளர் துறை மற்றும் தாராபுரம் வட்ட சட்டை பணிகள் குழு இணைந்து தாராபுரம் வட்டார கடைகளில் பணி புரியும் உங்களுக்கு பாலியல் வன்கொடைமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தாராபுரம் பூங்கா சாலை வர்த்தக கழக மண்டபத்தில் நடைபெற்றது தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் தாராபுரம் நீதிபதியுமான திரு.தர்மபிரபு தலைமை தாங்கி பெண்களுக்குக் எதிராக நடக்கும் குற்றத்தை தைரியமாக வெளிப்படுத்த முன் வர வேண்டும். குற்றம் நடந்தால் அந்தந்த தாலுக்கா மகளிர் காவல் நிலையத்தையும் இல்லையெனில் தாலுக்கா இலவச சட்ட உதவி மையத்தை அணுகி பரிகாரம் தேடி கொள்ளலாம் எனக் கூறினார்..

மேலும்,தாராபுரம் குற்றவியல் நடுவர் திரு.பாபு மற்றும் உரிமையியல் நீதிபதி திருமதி.மதிவதனி வணங்காமுடி பேசுகையில், பெண்கள் பிடிக்காத விஷயத்தை "நோ" என்ற ஒரு வார்த்தையில் சொன்னாலே போதும் என்றார், பெண் வழக்கறிஞர் திருமதி.சித்ரா பாண்ட்ஸ் பேசுகையில், பெண்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பாதுகாப்பை பற்றிக் எடுத்துறைத்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.பாதம் பிரியா பேசுகையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே எங்களின் முதல் கடமை எனக் ஊக்கமளித்து கூறினார்.. இவ்விழிப்புணர்வில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு.கண்ணன் தலைமையில் முழு ஏற்பாடு செய்து பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டத்தையும் சந்தேகங்களையும் கேட்டு பயன்பெற்றனர்.. இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad