தாராபுரம் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை)காலை 11 மணிக்கு பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தாராபுரத்தை சுற்றியுள்ள மின் நுகர்வோர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment