தாராபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதிகளில் சாக்கடை,குடிநீர், தெரு விளக்கு,உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தாலுகா செயலாளர் என்.ஃகனகராஜ் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து என்.கனகராஜ் தெரிவிக்கையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதி கேட்டு பலமுறை மனுஅளித்தும் எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை இது தொடர்ந்து கடந்த மாதம் ஐந்தாம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆனால் அடிப்படை வசதிகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே குடிநீர் சாக்கடை தெருவிளக்கு சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கண்டித்து கவுண்டச்சி ஊராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர்,எஸ்பி நகர், எம்பிஎஸ் காலனி, ஜெய்கணேசன் நகர், ஆப்பிள் ரெசிடென்சி, கே எஸ் கே நகர்,காந்தி நகர், சம்பத் நகர்,பாத்திமா நகர், பிஷப்தார்ப்கல்லூரியில் இருந்து என்.எம்.எல் நகர்,வரை உள்ள குப்பைகளை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் குமரன் நகர்,காந்தி நகர், வசந்த் நகர்,சிபி கார்டன்,அலங்கியம் ரோடு,ராம்நகர், ஜெயகணேசன் நகர்,மற்றும் வேலவர் திருமண மண்டபத்திற்கு வடபுறமாக குமரன் நகருக்கு செல்லும் நுழைவாயில் பேக்கரி கழிவுகள் உடைந்த கண்ணாடி டம்ளர்கள் சாம்பல் சுகாதார சீர்கேடும் ஏற்படுத்த பொருட்களை கொட்டி வருகின்றனர். அதை அகற்றுவதோடு வருங்காலங்களில் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment