முத்தூர் - காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தார் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி சின்னக்கரை ஸ்ரீ முருகன் திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் முத்தூர்- காங்கேயம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின் மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் இ.ஆ.ப, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன், தலைமை பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செல்லமுத்து மற்றும பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment