தாராபுரம் கோவிலில் சிவலிங்க சிலையை சுற்றிய மலைப்பாம்பு- பக்தர்கள் பால் ஊற்றி வழிபாடு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டை மேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது வழிபாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இந்தநிலையில் கோவிலுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது. இதனால் பக்தி பரவசமடைந்த பக்தர்கள் உடனே பால் ஊற்றி வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் பாம்பு அங்குள்ள மரத்தடிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர். பாம்பு லிங்கத்தை சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment