கிராம பகுதியில் இருந்து நகரப் பகுதிகளுக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்சைகளை இயக்க வேண்டும்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் மனு! மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப அவர்களிடம் திருப்பூர் புறநகர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் தலைவர் சித்ரா செயலாளர் நதியா தலைமையில் திரளாக பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது உழைக்கும் மக்கள் அதிகம் இருக்கும் பகுதியாக கிராமப்பகுதி உள்ளது இந்த கிராமப்பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் தொழிலாளர்கள் நகரப்புறத்திற்கு வந்து செல்லும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களுக்கு தினமும் 5 -6 முறை இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்கள் தற்போது ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகிறது இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்சில கிராமங்களுக்கு டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைத்துள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அளவு அரசு டவுன் பஸ்கள் இல்லாமல் இருந்து வருகிறது அதேபோல் குறிப்பிட்ட அரசு டவுன் பஸ்கள் போதிய பயணிகள் இல்லாததால் கிராமங்கள் வரை செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பிச் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர் இதை முறைபடுத்த வேண்டும் எனவும் கிராமப்புறங்களுக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப அவர்களிடம் மனு கொடுத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment