பல்லடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை செய்தி துறை அமைச்சர் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ பரிசோதனை திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ளும் ஏழை, நடுத்தர மக்கள் தங்கள் உடல்களை மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வே கள்ளிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார் இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப, சுகாதார துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment