திருப்பூர் தெற்கு SDPI கட்சியின் தொழிற்சங்கத்தின் (SDTU) சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் SDPI யின் திருப்பூர் தெற்கு தொழிற்சங்க பிரிவான SDTU சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் S.A.முகமதுபாரூக் தலைமையில் தாராபுரம் மற்றும் காளிபாளையம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் SDTU, மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், SDPI திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், SDPI தாராபுரம் தொகுதி தலைவர் செய்யது அபுதாஹிர், SDPI கட்சி நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானங்கள்: 1.தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகமாக செல்கின்றன இதனால் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் இரண்டு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும்
2. பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆட்டோ ஓட்டும் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது
இந்நிலையில் வாகனங்களின் FC மற்றும் INSURANCE. குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் சரியான ஒரு முடிவை எட்ட வேண்டும் என வலியுறுத்தி SDTU தொழிற்சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment