குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் முகாம் நடைபெற உள்ள ரேஷன் கடைகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் இதையொட்டி அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ் நாடு அரசு தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி இந்த முகாம்களில் குடும்பத் தலைவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும் இதன் மூலம் பயனாளிகளை தேர்வு செய்யவும் உத்தரவிட்ட நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப அவர்கள் ஒன்றாவது மண்டலத்தில் இருபத்தி நான்காவது வார்டு செல்லம்மாள் காலனி சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment