திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் ஏஜென்ட்கள் ஆதிக்கம் சான்றிதழ்கள் வழங்க அதிகாரிகள் தாமதம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் இ பி சரவணன் கோரிக்கை! திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்க விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் மாத கணக்கில் அலைகழிக்க வைக்கிறார்கள் மேலும் ஏஜென்ட்கள் மூலமாக சென்றால் மட்டுமே விரைவாக சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது இது பற்றி சமூக ஆர்வலரும், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளருமான இபி சரவணன் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்களிடம் பொதுநல மனு ஒன்றைக் கொடுத்தார், அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் ஏஜென்ட்கள் மூலமாக சென்றால் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது தொடர்பாக புகார் தெரிவிக்க தாசில்தார் செல் போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றால் அந்த செல்போன் எண் செயல்பாட்டில் இல்லை அனைத்து விதமான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் தாமதம் செய்து வருகின்றனர் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்று வழங்கும் பிரிவில் உள்ள அலுவலர் உரிய ஆவணங்கள் உள்ள மனுவை கூட திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே பொதுமக்கள் தரும் மனுக்களை மீது உரிய விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment