திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் சமீப காலமாக பல்வேறு திருட்டுகள் நடைபெற்று வந்தது. இதை கணியூர், மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து வரிசையாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில குற்றவாளிகளை, கூண்டோடு பிடிப்பதற்காக காவல்துறையினர் விட்டுப் பிடித்து வருகின்றனர். பல்வேறு வெளியூர்களுக்கு சென்றும் குற்றவாளிகளை தேடி கைது செய்தும் வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு காவல்துறையினர் மீது பலமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையினரின் துரித நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment