திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலை துறை வளாகம், வட்டார வளர்ச்சி வளாகம் வட்டாட்சியர் வளாகம் முன்பு மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமாக செயல்களை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தலைவர் செந்தில் குமார் கூறுகையில்: மணிப்பூரில் நடைபெற்ற மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல், இதுபோன்ற செயல்படுத்துபவர்களை மணிப்பூர் அரசு அவர்களை கைது செய்து உடனடியாக தண்டிக்க வேண்டும், மேலும் பெண்களுக்கு எதிரான அராஜகமான செயலை கண்டிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என கூறினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், வட்டக்கிளை செயலாளர் தில்லையப்பன், இணைச் செயலாளர் தங்கவேல், இணைச் செயலாளர் சுமதி,மாவட்ட இணைச் செயலாளர் மேகலிங்கம் மேலும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment