இந்த புகைப்படம் சந்திர மண்டலத்தில் எடுக்கப்படவில்லை திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மாரியம்மன் கோவில் வீதியில் மக்கள் நடக்கும் ரோடுதான் இது! திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் அனுப்பர்பாளையம் 10 வது வார்டு இந்த பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் பகுதியிலிருந்து மாரியம்மன் கோவிலுக்கு இந்த மாரியம்மன் கோவில் வீதி வழியாகத்தான் பொதுமக்கள் நடந்து இருசக்கர வாகனங்களில் செல்வார்கள் பல நூறு வாகனங்கள் இதில் தினமும் காலை முதல் இரவு வரை பயணிக்கும் இந்த ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க தனியார் நிறுவனம் குழியை தோண்டி பதித்துவிட்டு குடிகளை மூடும் பொழுது வெறும் கற்களை கொண்டு மூடியதால் கற்கள் இப்படி மேலே உள்ளது இதில் நடந்து வரும் பெரியவர்கள், பள்ளி குழந்தைகள் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் தடுமாறி விழுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் இந்த குழிகளை தோண்டும் பொழுதும் அதை மூடிய பின்னரும் பார்வையிடுவதில்லை மிகவும் அலட்சியப் போக்கில் உள்ளனர் இதனால் தமிழ்நாடு அரசுக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்படுகிறது பல்வேறு இடங்களில் உள்ள குறைகளை திருப்பூர் மாநகராட்சிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் ஒரு சில புகார்களை சரி செய்யாமலே இருக்கின்றனர் தங்கள் பணிகளில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி, இந்த மேடுகள் மீது கற்கள் மீது பொதுமக்கள் பயணிக்கும் பொழுது விபத்து ஏற்பட்டால் மாநகராட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா? இல்லை துறை அதிகாரிகள் நஷ்டஈடு கொடுப்பார்களா? சாலை வரி உள்ளிட்ட வரிகள் அரசுக்கு செலுத்தும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment