மகளிர் உரிமைத்தொகை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 July 2023

மகளிர் உரிமைத்தொகை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

 


மகளிர் உரிமைத்தொகை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.  திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 24-7-2023 முதல் 4- 8- 2023 வரை 827 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட 788 மையங்களில் 5,34 460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் 1429 தன்னார்வலர்களை கொண்டு கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது, இரண்டாம் கட்டமாக 5- 8- 2023 முதல் 16-8-2023 வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் மண்டலம் 4 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் 6 பகுதிகளில் உள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 233 வார்டுகளில் இரண்டாம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும் மாவட்டத்தில் 1035 நியாய விலைக் கடைகள் உள்ளன இதில் 1113 முகாம்களில் இரண்டு கட்டங்களில் நடத்தப்படுகிறது இந்த விண்ணப்ப பதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை அருகில் உள்ள அலுவலக கட்டிடங்கள் சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். அந்தந்த பகுதியை சார்ந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது‌. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் கட்ட பதிவு நடைபெறுகிறது பொதுமக்களின் வசதிக்காக காலை முப்பது விண்ணப்பங்களும் மாலை முப்பது விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் 25-7-2023 அன்று காலை முப்பது விண்ணப்பங்களும் மாலை முப்பது விண்ணப்பங்களும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து மையங்களுக்கு ஒரு மண்டல அலுவலர்களும் 15 மையங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர்கள் உள்பட மொத்தம் 7 82 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்டம் தோறும் நடைபெறும் முகாம்களுக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்பு பணிக்காக டோக்கன் ஆதார் அட்டை குடும்ப அட்டை மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் எந்தவித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை அனைத்து பகுதிகளிலும் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக டோக்கன்களில் டோக்கன் நம்பர் நாள் மற்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் எந்த மையத்திற்கும் வரவேண்டும் எந்த நாளில் வரவேண்டும் என்று டோக்கனில் எழுதப்பட்டு வழங்கப்படும் குறிப்பிட்ட அந்த மையத்திற்கு அடுத்த நாள் அந்த நேரத்திற்கு வந்தால் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தா. கிறிஸ்துராஜ் இ ஆ பா அவர்கள் தெரிவித்தார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad