நெய்வேலி என்எல்சி நிறுவன போராட்ட விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாராபுரம் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டப் பேரணி..
தாராபுரம், ஜூலை 28-கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது எதற்கு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் கல் வீச்சு மற்றும் தடியடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் பாமக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தலைமை தபால் நிலையம் முன்பு பாமக நகர பிரவீன் சந்தர் நகர செயலாளர், தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் பாமக கட்சியின் கொடியை ஏந்தி கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தமிழக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் கோஷங்களை எழுப்பி நடை பயணமாக பழைய நகராட்சி வளாகம் வரை பேரணியாக சென்றனர்.. இந்த போராட்த்தில் நகரத் தலைவர் பரமேஸ்வரன்.
முன்னிலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அலங்கியம் பிரபாகரன். ஒன்றிய தலைவர் செல்வராஜ். மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர். மேற்கு ஒன்றியம் தலைவர் ரங்கநாதன். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி. நாட்ராயன். மாவட்ட விவசாய சங்க செயலாளர் சுப்பிரமணியம்.அமராவதி மாவட்ட மகளிர் அணி செயலாளர்.கவிதா ஒன்றிய மகளிர் அணி தலைவி.சாரதா ஒன்றிய மகளிர் அணி துணை தலைவி. நகர பொறுப்பாளர் சுப்பு.கருப்புசாமி.. நகர இளைஞரணி கோகுல். லோகு. தங்கராஜ். குருநாதன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment