தாராபுரத்தில் அரிய வகையான பிரம்மா கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கண்டு ரசித்து சென்றனர்..
தாராபுரம், ஜூலை 28-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 14வது வார்டு நேதாஜி தெருவில் உள்ள ரவி - கலாவதி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர் இந்த நிலையில் இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது இல்லத்தில் உள்ள தோற்றத்தில் அரிய வகையான பிரம்ம கமலம் தாவர செடியை நட்டு வைத்து இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர் இந்த நிலையில் இன்று இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் அந்த அரிய வகை பூவான பிரம்ம கமலம் பூ பூத்திருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அந்த பூவினை பார்த்து வணங்கி பூஜையிட்டு பின்னர் அவரது இல்லம் அருகே இருந்த நபர்களிடம் தகவல் தெரிவித்து தகவல் அறிந்த அந்த பிரம்ம கமலா பூவை ஆட்சியரத்துடன் கண்டு ரசித்தனர்..
இது குறித்து கலாவதி குருவே எங்களது வீட்டு தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்தில் தனது உறவினர் இல்லத்தில் அரிய வகை பூவான பிரம்ம கமலம் செடியை வாங்கி வந்து எங்களது தோட்டத்தில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்தேன் இந்த நிலையில் இன்று மாலை சுமார் எட்டு முப்பது மணி அளவில் அந்த பிரம்ம கமலம் பூ பூத்தது கண்டு ஆச்சரியத்துடன் கண்டு பிரம்மாவின் பூஜைக்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பூஜையிட்டு பின்னர் அருகில் இருந்த நபர்களுக்கு தகவல் அளித்தேன் அதனை கண்டு ரசித்து எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
பேட்டி: திருமதி.கலாவதி
மருத்துவ குணங்கள்:
பிரம்ம கமல மலர், கைகால்கள் பக்கவாதத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும் நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. பிரம்ம கமல பூவில் ஆல்கலாய்டுகள், ஃப்ளேவனாய்டுகள், டெர்பினாய்டுகள், கிளைகோசைட்கள், சாபோனின்கள் போன்ற பல வகையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் உள்ளன. அவை நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
இது ஒரு அரிய தாவரமாகும், இது கவர்ச்சிகரமான பெரிய பூக்களைக் கொண்டுள்ளது,
முக்கியமாக இமயமலைப் பகுதியில் காணப்படுகிறது. பிரம்ம கமல் செடி இந்தியாவில் ஒரு பெரிய ஆன்மீக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது மற்றும் வாஸ்து சாஸ்திரம் இந்த செடியை உங்கள் வீட்டு தோட்டத்தில் வைப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை பரிந்துரைக்கிறது..
வாஸ்து:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பிரம்ம கமல் செடியானது மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் ஒரு புனிதமான தாவரமாகக் கருதப்படுகிறது, மேலும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்து உரிமையாளரைப் பாதுகாக்கிறது.
பிரம்ம கமல் இமயமலையில் காணப்படும் ஒரு அரிய பூக்கும் தாவரமாகும். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான பருவமழை மாதங்களில் பூக்கள் பூக்கும்.
இந்த தனித்துவமான மற்றும் அரிதான தாவரமானது இமயமலை மற்றும் இந்தியாவின் பிற மலைப்பகுதிகள், நேபாளம், பூட்டான் மற்றும் திபெத் ஆகியவற்றிற்கு சொந்தமானது. இந்து மாதமான ஷ்ரவணாவின் (ஜூலை/ஆகஸ்ட்) பௌர்ணமி நாளில் விடியற்காலையில், இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்று கூறப்படுகிறது.
பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள்.
இந்து கலாச்சாரத்தின் படி, பிரம்ம கமல் செடி புனிதமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் துங்கநாத் ஆகிய புனிதக் கோயில்களில் சிவபெருமானை வழிபட இந்த மலர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரம்ம கமலம் பிரம்மாவின் பெயரால் அழைக்கப்படுகிறது மற்றும் தெய்வம் தனது கையில் வைத்திருக்கும் அதே பூவாகும். இந்த பூவை சிவபெருமானுக்கு சமர்பித்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது சிலரின் நம்பிக்கை. பூ பூக்கும் போது ஆசைப்படுவது விருப்பங்கள் நிறைவேறும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
இது உத்தரகாண்டின் அதிகாரப்பூர்வ மாநில மலர் ஆகும்.
No comments:
Post a Comment