திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர்அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக தலைவரும் ஆகிய கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக திமுக கொண்டாடி வருகிறது நலத்திட்ட உதவிகள் பொது கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளாக திமுகவினர் கொண்டாடுகின்றனர் திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பாக வேலம்பாளையம் டிசோ பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதமாக உணவு வழங்கி வருகின்றனர் தற்போது பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் , பாட நோட்டுகள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள், அசைவ உணவுகள் வழங்கினர் இந்த நிகழ்வில் எஸ்.திலக்ராஜ் தலைமையில் ஒன்னாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம்,14வது வட்ட கழக செயலாளர் மு. ரத்தினசாமி பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், வட்ட கழக செயலாளர்கள் செந்தில் ,செல்வம், மாவட்ட மகளிர் அணி கலைச்செல்வி, மகளிர் தொண்டரணி ஆனந்தி, மாவட்ட மற்றும் மாநகர மாணவரணி நிர்வாகிகள் சக்திவேல், அசோக்குமார், கார்த்திக், சூர்யா, மணிகண்டன், மாநகர ஆதிதிராவிடர் அணி பிரகாஷ், இளைஞர் அணி அசோக், விளையாட்டு அணி சண்முக விக்னேஷ், மாணவரணி சார்ந்த சுல்பிகர் அலி, பல்லடம் அருண், டேவிட், இளவரசன் ,விஜய சிம்ம ராஜா, சண்முகராஜா, கணேஷ் குமார், அன்சர் அலி, பாலகணேஷ், நந்தகுமார் ,பிரபு, கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment