தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தாமாகவே முன்வந்து திருக்கோவிலுக்கு ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, தனியார்கள், பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இச்சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கையின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையின் காரணமாக கோயில்களின் நிலத்தை பயன்படுத்தி வந்தவர்கள் தாமாகவே முன்வந்து அந்த நிலங்களை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று தாராபுரம் நகர பகுதி, மற்றும் கோனாபுரம் ஆகிய இடங்களில் 10.98 ஏக்கர் நன்செய் பூமியை கோனாபுரம் அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவில் மற்றும் நஞ்சை பூமி2. 14 ஏக்கர் தனிநபர் பெயரில் இடம் பெற்றிருப்பதை, திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு கோயிலுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 28.07.2023 அன்று, திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரையின்படியும், திருப்பூர் மாவட்ட இந்து சமயநலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையிலும், திருப்பூர் மாவட்ட ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் குருராஜன் தாராபுரம் சரக ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment