தாராபுரத்தில் மணியம்மை நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு மணியம்மை நகர் பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8,00,000 மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. கயல்விழி செல்வராஜ் குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன்,
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கிரிஜா,அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பலர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் நேற்று புதிதாக மையத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முன்னிலையில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்..
No comments:
Post a Comment