மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் கலைஞர் மகளிர் திட்ட முகாம்களில் ஆய்வு செய்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 July 2023

மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் கலைஞர் மகளிர் திட்ட முகாம்களில் ஆய்வு செய்தார்


மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் கலைஞர் மகளிர் திட்ட முகாம்களில் ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் மகளிர்க்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் மகளிர் உரிமை தொகை பெற்றிட விண்ணப்பங்கள் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்பட்டு பிறகு சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி அதில் மகளிர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பியும் சரி பார்த்தும் ஒப்படைக்கும் பணி சரியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்களில் ஆய்வு செய்யும் விதமாக மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாநகராட்சி தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ்  இ.ஆ.ப, மாண்புமிகு மேயர் என் தினேஷ்குமார்திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் MLA நகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப. துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன்மண்டல தலைவர்கள் இல பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், திருமதி உமா மகேஸ்வரி தொமுச மாநில தலைவர் டி கே டி.மு. நாகராசன் மற்றும் கலந்து கொண்டனர் 


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad