மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யகோரி தாராபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் தெற்க்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் சித்ரவதை செய்யபட்டதை கண்டித்தும் மணிப்பூர் மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யகோரியும் அக்கட்சியின் நகர தலைவர் குறிஞ்சி செந்தில்குமார் தலைமையில் தாராபுரம் காந்தி சிலைமுன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டது இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, முருகானந்தம், அசோக்குமார், அக்கீம், சீனிவாசன் மற்றும் பெண் நிர்வாகிகள், பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்தனர்..
No comments:
Post a Comment