தாராபுரத்தில் திரைப்பட நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திரைப்பட நடிகர் சூரியா வின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக காடையூர் அருள்மிகு காடை ஈஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றது..
பின்னர் தாராபுரத்தில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் மற்றும் வஞ்சிபாளையம் பாரதியார் குருகுலம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடிகர் சூர்யாவின் பெயர் பொறித்த கேக்குகளை வெட்டி அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, மேலும் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் நோட்டு,புத்தகங்களும்,எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன..
No comments:
Post a Comment