டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் திருப்பூரில் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மறைந்து 7 வருடங்கள் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அப்துல்கலாம் அய்யா விற்கு எட்டாவது வருட நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக சிவன் தியேட்டர் அருகில் உள்ள வடக்கு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாம் அய்யாவின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment