பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருப்பூர் 14 வது வார்டில் கொண்டாடப்பட்டது
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் 14-வது வட்ட திமுக அலுவலகத்தில் வட்டக் கழக செயலாளர் மு. ரத்தினசாமி அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் வேலம்பாளையம் மாநகராட்சி ஒன்னாவது மண்டல அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு திருப்பூரில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அண்ணா, பெரியார் சிலைக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமாகிய க. செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் மரியாதை செலுத்தினர் இந்த அனைத்து நிகழ்வுகளிலும் 14வது வட்ட ,பகுதி,அணி, மற்றும் பாத்திர சங்க பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment