இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நகர்குழு சார்பில் மோடி அரசுக்கு எதிராக மறியல் போராட்டம்! திருப்பூர் மாநகரம்,
திருமுருகன்பூண்டி
அம்மாபாளையம் செக் போஸ்ட் அருகில் அமைந்துள்ள பேருந்து நிலையம் முன்பிலிருந்து திருமுருகன் பூண்டி நகர குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிக் கொண்டு சென்று அம்மாபாளையம் செக் போஸ்ட் அருகாமையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திருமுருகன்பூண்டி நகர குழு திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில், பி.மோகன் மாவட்ட துணைச் செயலாளர் சி பி ஐ, மற்றும் பி ராமசாமி பூண்டி நகர செயலாளர், சி பி ஐ ஆகியோர்களின் தலைமையில், மக்கள் விரோத மோடி அரசை அகற்ற மறியல் போராட்டம் துவங்கி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொன்னுசாமி, பூண்டி நகர துணைச் செயலாளர் சி பி ஐ ,
ராஜேஸ்வரி பூண்டி நகர மகளிர் அணி செயலாளர், & பூண்டி நகர மன்ற துணைத் தலைவர், லீலாவதி பூண்டி நகர மகளிர் அணி தலைவர் மற்றும் 24 வது வார்டு கவுன்சிலர், கதிர்வேல் ராக்கியாபாளையம் கிளைச் செயலாளர், பூண்டி 15 வது வார்டு கவுன்சிலர், மகேஸ்வரி பூண்டி ஒண்ணாவது வார்டு கவுன்சிலர் , கோகிலா பூண்டி 19 வது வார்டு கவுன்சிலர் .ஆகியோருடன் திரளாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருமுருகன்பூண்டி காவல் துறையினர் கைது செய்து ராக்கியாபாளையத்தில் உள்ள பொன்காளியம்மன் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment