திருப்பூரில் மின்சார பைக் பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிந்தது , பொதுமக்கள் அதிர்ச்சி!
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் மின்சார இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. அந்த ஷோரூமுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் உள்ள பேட்டரி திடீரென்று வெடித்த நிலையில் தீ பற்ற தொடங்கியது இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர் அதற்குள் வாகனம் முழுவதும் மள மளவென தீ பரவியது அருகில் இருந்த மற்ற இருசக்கர வாகனங்களை ஊழியர்கள் விரைவாக பாதுகாப்பாக எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது ஊழியர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இதில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் சேதமானது. மற்ற வாகனங்கள் ஊழியர்கள் அப்புறப்படுத்தியதால் தப்பியது இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பெட்ரோல் வாகனத்திற்கு மாற்றாக தற்போது பேட்டரி மூலம் இயங்கும் வகையில் கார், பைக், ஸ்கூட்டர் என்று பலதரப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த இருசக்கர வாகன பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது பொதுமக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாவட்ட செய்தியாளர்
No comments:
Post a Comment