திருப்பூர் மாநகராட்சி 35 ஆவது வார்டில் சாக்கடை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 35 வது வார்டுக்குட்பட்ட யுனிவர்சல் ரோடு, சாய்பாபா கோவில் பின்புறம், வாலிபாளையம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது வீதிகள், ப்ராசஸ் சர்வர் வீதி ஆகிய பகுதிகளில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் இருந்த சாக்கடை கால்வாய்கள் மாநகராட்சியின் Sewer Suction வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த கழிவுநீர் குப்பைகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வெளியேறும் வகையில் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த பணிகளை 35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், தெற்கு திமுக மாநகர பொருளாளருமான செந்தூர் முத்து ( எ) கோ. முத்துகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த தூய்மை பணிகள் முழுவதுமாக முடியும் வரை உடனிருந்து பார்வையிட்டார். மாவட்ட செய்தியாளர்
அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment