ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனுப்பர்பாளையம் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரிய பெருமக்களுக்கு மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்த வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அனுப்பர்பாளையம் மாநகராட்சி நுற்றாண்டுவிழா துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மு.ரத்தனசாமி துணைச் செயலாளர் மணிமாறன், பொருளாளர் வேலுச்சாமி, துணைச் செயலாளர் பிரகதீஸ்வரன், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் குழந்தைவேல் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment