திருப்பூர் மாநகராட்சி 50 ஆவது வார்டில் புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 50 ஆவது வார்டில் பெரிய தோட்டம் நான்காவது வீதியில் உப்பு தண்ணீர் தொட்டி பழுதாகி இருந்தது. அதனை அகற்றி விட்டு புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க ஐம்பதாவது வார்டு மனித நேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்தீன் ஏற்பாட்டில் காலத்திற்கு ஏற்றவாறு மாறுதல் செய்யப்பட்டு கான்கிரீட் தூணூடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. மேலும் பெரிய தோட்டம் மெயின் வீதி சந்தில் புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு புதிய பைப் போடப்பட்டது. பொதுமக்களுக்கு உப்பு தண்ணீர் வினியோகம் முறையாக செய்யப்பட்டது. தூணூடன் கூடிய இந்த தண்ணீர் தொட்டி இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்து மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்தீன் அவர்களுக்கு 50 வது வார்டு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment