நாம் தமிழர் கட்சியினர் தமிழின பெருமகன், பா.கா.மூத்கையா தேவர் அவர்களுக்கு 44 வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்தவரும் , கச்சத்தீவு தாரை வார்த்ததற்காக நாடாளுமன்றத்தில் பெருங்குரல் எழுப்பிய வரும், 1952 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை அவர் இறக்கும் வரை பொது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் அவர் வெற்றியாளராக இருந்து வரலாறு படைத்தவருமாகிய. பா.கா. மூக்கையாத்தேவர் அவர்களின் 44 வது நினைவு நாளில் திருப்பூர் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பா.கா. மூக்கையா தேவர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள், பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment