நாம் தமிழர் கட்சி சீமான் மீது பொய் புகார் கொடுக்கும் விஜயலட்சுமி, வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் பாசறை புகார்! நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முன்னாள் திரை பட நடிகை விஜயலட்சுமி , மற்றும் வீரலட்சுமி பொய் புகார்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் பாசறை சார்பாக திருப்பூர் மாவட்ட காவல் ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது அந்த மனுவில் சாதி மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் தனியாக 2016 ஆம் ஆண்டு முதல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 30 லட்சம் வாக்குகள் வரை பெற்று மூன்றாவது தனித்துவம் வாய்ந்த சிறப்பு மிக்க அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் இயங்கி வருகிறது நாம் தமிழர் கட்சியில் மட்டும் தான் பெண்களுக்கு சம உரிமை என்ற முழக்கத்துடன் அனைத்து தேர்தலிலும் 50 சதவீதம் இடங்களில் மகளிர் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் உள்ள சீமான் அவர்களின் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரசியலில் அவரது வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் விஜயலட்சுமி என்ற முன்னாள் நடிகையும் அவருடன் வீரலட்சுமி என்ற பெண்ணும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டி பொய்யாகவும் அவதூறாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் பிற கட்சிகளின் தூண்டுதலின் பேரிலும் அபாண்டமான எவ்வித ஆதாரமும் இன்றி ஒரு பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். உள்ளனர். மேலும் சீமான் அவர்களின் தாயாரையும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் மேற்படி நபர்கள் சமூக வலைத்தளங்கள் பேசி அவதூறு பரப்பி வருகிறார்கள் . மேலும் இவர்கள் பொய் புகார் கொடுத்தது அல்லாமல் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த போது அவர்கள் இரு மதத்தினர் மற்றும் பிரிவினர் கிடையே பகை உணர்வை தூண்டும் விதமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் மிரட்டி பணம் பறிக்கும் தீய நோக்கத்தோடு, முறையற்ற ஆதாயம் அடைவதற்காகவும் அதனால் முறையற்ற நட்டம் நாம் தமிழர் கட்சிக்கும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் அவர்களுக்கும் ஏற்படுத்தும் வகையில் மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள முன்னாள் நடிகை விஜயலட்சுமி மற்றும் அவரை தூண்டிவிடும் வீரலட்சுமி ஆகியோர்களை அழைத்து விசாரித்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு கொடுக்கும் நிகழ்வில் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் பாசறை நிர்வாகிகள், அனைத்து பாசறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் , மகளிர் அணி நிர்வாகிகள், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment