திருப்பூர் பி என் ரோடு உழவர் சந்தையில் முறைகேடான வாகன வசூல்.
பி என் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தினமும் அதிகாலை நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கடை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாகனத்தில் வந்து பெற்றுச் செல்வர். இந்த சந்தையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரசீது தராமல் ஐந்து ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர். முறைகேடான வசூல் வேட்டையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு ரூபாய் ஐந்து வீதம் கட்டாயமாக வசூல் செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்பது பொதுமக்கள் கேள்வியாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment