பல்லடம் -தாராபுரம் இரு வழி சாலை நான்கு வழி சாலையாக மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம், தாராபுரம் சாலையில் மேட்டுக்கடை முதல் குண்டடம் வரை இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு .பெ. சாமிநாதன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் . இல. பத்மநாபன் மற்றும் துறைசார் அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் .
No comments:
Post a Comment