உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தட்டான்குட்டை அரசு பள்ளியில் மரங்கள் நடப்பட்டது. எந்த தினமாக இருந்தாலும் இந்த பூமியை காக்க ஒருவர் ஒரு மரமாவது நட வேண்டும், வளர்க்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் மரங்கள் நட்டும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர் . அந்த வகையில் இன்று (8- 9- 2023) உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நமது நாட்டின் பசுமையை பாதுகாக்கும் பொருட்டும் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் பூமியை பாதுகாக்க மரங்கள் நட வேண்டும் என்று விழிப்புணர்வூட்டவும் திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் தட்டான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment