குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி பகுதிகளில் குறிப்பாக நரசிங்காபுரம், செட்டியார் மில் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து, நேற்று ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் K.ஈஸ்வர சாமி, உதவி நிர்வாகப் பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
உடுமலை விஜயலஷ்மி ஆகியோர் ஆலோசனை செய்தனர். உடன் மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரொனால்ட் ஷெல்டன் பெர்னாண்டிஸ், மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் K. முருகன், செயலர் முகமது ஈசாக் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment