கலைஞர் உரிமை தொகை வாங்கிய பெண்கள் புதிய முறையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்!
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும் திமுகழக தலைவருமாகிய மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை வாங்கிய பெண்கள் தங்கள் இல்லங்களின் வாசலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று கோலப்பொடியை கொண்டு எழுதி உள்ளனர். பெண்கள் தங்களுக்கே உரித்தான வகையில் கோலம் போட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்தது அந்த பகுதியில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் .
No comments:
Post a Comment